Pages

12/26/2010

க‌றிவே‌ப்‌பிலையின் பயன்


இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது.

75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது.

170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது. ]

உணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.

மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.

முகத்தில் அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.

கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.

"அவனுக்கு நீ கறிவேப்பிலை மாதிரிதான்; பார்த்து கவனமாக அவனிடம் இரு" என்று பலர் சொல்வதுண்டு. இனியும் யாராவது இப்படி சொல்வார்கள்?



புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.



நீரழிவு நோயை கட்டுப்படுத்த

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது.

அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.



உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?

கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் வாசனைக்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், அதிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பது பல பேருக்குத் தெரியாது.

அதன் மருத்துவ குணங்களை புரிந்து கொண்டதால் தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடுகையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.



கறிவேப்பிலை சட்னி

தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 1 கோப்பை

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி

புளி - 1 கொட்டை அளவு

தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி

பூண்டு - 4 பல்லு

இஞ்சி - 1 துண்டு

உப்பு - தேவையான அளவு

தாளிக்ககடுகு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/4தேக்கரண்டி

உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து



செய்முறை:-

1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.

4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.

6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.

7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும்.



குறிப்பு:

1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

12/25/2010

நற்குணம்

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும்
இருப்பார். இது விஷயத்தில் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு
உண்டு. நபி ஸல் அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல,
நபி ஸல் அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத்
திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி ஸல்
அவரகளின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத்
தூண்டவுமில்லை. நபி ஸல் அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை
கண்டார்கள். நபி ஸல் அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு
சுட்டிக்காட்டினார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி ஸல் அவர்களுக்கு பத்து
ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று
கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான்
செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ
கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி ஸல் அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில்
நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில்
உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால்
அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

மேலும் கூறினார்கள்: "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும்,
மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில்
குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர்,
மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப்
பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர்
ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களிடமிருந்து
நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது
கண்களால் நபி ஸல் அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக்
கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று
செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத
மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல் அவர்கள் கருணையாளராக
இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து
தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக
இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களிடம் வந்து
அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில
நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ
என அஞ்சுகிறேன்'' என்றார். நபி ஸல் அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது
வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை
நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக்
கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு
ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை
சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக
இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள
வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய
சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும்
உறுதிப்படுத்தினார்கள்.

முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு
முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம்
காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான்.
மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது.

முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின்
தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை
கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில்
நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை
உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத்
திர்மிதி)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி
ஸல் அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில்
குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர்
என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி)
அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். நாங்கள் நபி ஸல் அவர்களின்
சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல்
அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி ஸல் அவர்களின் சபையில் எங்களில் எவரும்
பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி ஸல் அவர்களிடம் "அல்லாஹ்வின்
அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று
வினவினர். நபி ஸல் அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக்
கூறினார்கள்.

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம்
எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு
கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும்
மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை,
நோன்புக்கு இணையானதாகும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில்
நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது
நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு
உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம்
நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்''
என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தங்களது சொல், செயலால் நபி ஸல் அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை
தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள
தூண்டினார்கள்.

நபி ஸல் அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி
அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின்
தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.
அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி ஸல் அவர்கள்,
""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப்
போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள்.
(முஸ்னத் அபூ யஃலா)

மேலும் கூறினார்கள்: "நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும்,
உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத்
தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி ஸல் அவர்கள்: "யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய்.
எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி
வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)
....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்.
(அல்குர்அன் 68:4)
அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி ஸல்
அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின்
முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள
வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். நற்குணம் என்பது முழுமையானதொரு
வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம்,
விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது,
நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள்
உள்ளடங்கியுள்ளன.

இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை
மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை
கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு
இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல்
சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம்
வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த
சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை.

இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக,
இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல
என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.

இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து,
மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின்
ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம்
மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல்
அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.

12/14/2010

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:

*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:


1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

3) குடல் புண்ணின் அறிகுறிகள்:


காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.

சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:

சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.

இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.

*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.

*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:

1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம்

முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்கும் போது எனக்கு வயது முப்பதைத்
தாண்டியிருக்கவில்லை. இரவின் கடைசிப் பகுதி வரைக்கும் அரட்டையடித்துக் கொண்டிருந்த
அந்த இரவை நான் மறக்கமாட்டேன். அது வெட்டிப்பேச்சுக்கள் நிறைந்த ஓரிரவாக இருந்தது.
மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலும் கூடாத செய்திகளை ஏனையவர்கள் மீது
சுமத்துவதிலும் மூழ்கிப்போன ஓரிரவாக அது இருந்தது. பெரும்பாலும் அவர்களை
சிரிப்பூட்டுவதையும் புறம் பேசுவதையும் நானே பொறுப்பேற்றிருந்தேன். அந்த இரவை நான்
நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
ஆம் நான் அனைவரையும் கேலி செய்தேன் எனது நண்பர்கள் வரைக்கும் எவரும்
என்னிடமிருந்து
தப்பவில்லை. சில நபர்கள் எனது கிண்டல்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள என்னை
விலகி நடந்தார்கள்.அந்த இரவில் நான் கண் தெரியாத ஒரு மனிதரைப் பார்த்தேன். அவர்
சந்தியிலே தடுமாறித் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார். அதில் கவனிக்கவேண்டியது
என்னவெனில் எனது கால்களை அவருக்கு முன்னே நான் வைத்தேன் உடனே அவர் கீழே
விழுந்தார். அவர் தனது தலையால் உந்து நோக்கி அவர் என்ன கூறுகிறார் என்பதை அவரே
அறியாத நிலையிலிருந்தார். நான் சிரித்தவனாக சந்தை வழியே நடந்தேன். வழமைபோல
தாமதமாகவே என் வீட்டுக்கு வந்தேன். என் மனைவி என்னை எதிர்பார்த்தவாறு இருந்ததைக்
கண்டேன். அவளோ பார்ப்பதற்கு பரிதாபமான நிலையிலிருந்தாள். கவலை தோய்ந்த குரலில்
“ராஷீத் நீங்க எங்கே இருந்தீங்க?” அவள் கேட்டாள். நான் கேலி செய்தவனாக வழக்கம் போல
‘செவ்வாய்க் கிரகத்தில் என் நண்பர்களுடன் நகைச்சுவையில் இருந்தேன்” என்று கூறினேன்.
‘நான் சோர்ந்து போயுள்ளேன். எனது பிரசவ நேரம் சில நொடிகள்தான் என்பது எனக்குத்
தெரிகிறது” என்று அவள் கூறினாள் அப்போது அவளின் கன்னத்திலே கண்ணீர்ச் சொட்டுக்கள்
வடிந்தன. எனது இரவு நேர வெட்டிப்பேச்சைக் குறைத்து என் மனைவியின் விடயத்திலே நான்
கவனம் எடுக்க வேண்டும் என்பது கட்டயாம் என நான் உணர்ந்தேன். குறிப்பாக அவள் தனது
ஒன்பதாவது மாதத்திலிருப்பதால் நான் மிக அவதானத்துடன் இருப்பது அவசியம் என எனக்குப்
புலப்பட்டது. உடனே என் மனைவியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். பிரசவ
அறைக்குள் நுழைந்தேன். தாங்க முடியாத வேதனைகளால் என் மனைவி நீண்ட நேரம்
வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்தவனாக நான் அவளின் பிரசவத்தை
எதிர்பார்த்திருந்தேன். அவளின் மகப்பேற்றுக்காய் நான் அவசரப்பட்டேன். நீண்ட நேரம்
நான் காத்திருந்ததால் எனக்கு சோர்வேற்பட்டது. தவிர்க்கமுடியாது நான் வீடு
சென்றேன்.
என் மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களிடம் என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து
எனக்கு நற்செய்தி கூறச்சொல்லியிருந்தேன்.
சில மணிநேரத்துக்குப் பின்னர் ஸாலிம் பிறந்த செய்தியை எனக்கு கூறுவதற்காய் என்னோடு
அவர்கள் தொடர்பு கொண்டார்கள். உடனே மருத்துவமனைக்கு நான் விரைந்தேன். அங்கே சென்ற
நான் என் மனைவியின் அறையைத்தான் முதலில் அவர்களிடம் கேட்டேன். என் மனைவிக்குப்
பொறுப்பான வைத்தியரை நாடுமாறு என்னிடம் அவர்கள் வேண்டிக் கொண்டனர். ‘அவர் எந்த
வைத்தியர் என எனக்குச் சொல்லுங்க” என்று உரத்த குரலில் நான் அவர்களிடம் கேட்டேன்
ஏனெனில் என் மகன் சாலிமைப் பார்ப்பதற்கு நான் ஆவலாய் இருந்தேன்.
நான் வைத்தியரின் அறைக்குள் நுழைந்தேன் அல்லாஹ்வின் சோதனைகள் பற்றியும் அவனின்
ஏற்பாட்டு விதிகளை நல்ல முறையில் பொருந்திக் கொள்வது பற்றியும் என்னிடம் அன்பாய்
எடுத்துக் கூறினார். பின்னர் “உனது குழந்தையின் கண்களில் கடுமையான திறை
காணப்படுகிறது அதனால் உன் குழந்தை கண் பார்வையிழந்திருப்பது
தெரியவந்துள்ளது” என்று
அவர் கூறினார். நான் தலை குனிந்தேன். நான் சந்தித்த கடந்த கால நிகழ்வுகளை ஒரு கனம்
அலவிப்பார்த்தேன். அப்போது சந்தையிலே ஏலனம் செய்து தொந்தரவுபடுத்தி சிரிப்புக்கு
ஆளான அந்த கண்தெரியாத மனிதர் என் நினைவில் தெரிந்தார். அல்லாஹ் மிகத் தூய்மையானவன்
அவன் எப்படி நாடினானோ அவ்வாறே உலகம் இயங்குகிறது. சற்று நேரம்
நிலைகுலைந்தவனாக நான்
நின்றிருந்தேன். என் மனைவியையும் என் குழந்தையையும் ஞாபகப்படுத்தினேன்.
வைத்தியரின்
கருனைத் தன்மைக்காய் அவருக்கு நன்றி கூறிவிட்டு என் மனைவியைப் பார்ப்பதற்காய்
நடந்தேன். என் மனைவி கவலைப்படவில்லை அவள் அல்லாஹ்வின் விதிகளை நம்பியவளாகவும்
ஏற்பவளாகவும் மனிதர்களை ஏலனம் செய்யக்கூடாதென காலமெல்லாம் எனக்கு
உபதேசிப்பவளாகவுமிருந்தாள் ‘புறம்பேசவேண்டாம்” என அடிக்கடி எனக்கு அவள் அறிவுரை
கூறுவாள்.
வைத்தியசாலையிலிருந்து தாயும் சேயும் நானும் வெளியேறினோம். உண்மையிலேயே என்
குழந்தையிலே அதிகமாக நான் கவனமெடுக்கவில்லை. அவனை வீட்டில் இல்லாதவாறே என்
குழந்தையை நான் கணக்கிட்டேன். என் குழந்தை அழுகின்ற போது முன்னறைக்குச் சென்று
உறங்குவதற்காக நான் விரண்டோடிவிடுவேன். ஆனால் என் மனைவி குழந்தை ஸாலிம்
மீது அதிகம்
கவனமெடுப்பவளாக அவனை அதிகமாய் நேசிப்பவளாக இருந்தாள். இருந்தாலும் நான் அவனை
வெறுத்திருக்கவில்லை என்றாலும் அவனை என்னால் நேசிக்க முடியவில்லை. ஸாலிம்
வளர்ந்தான் தவழ ஆரம்பித்தான் அவனுடைய தவழுகை அபூர்வமாய் இருந்தது.
அவனுடைய வயது ஒரு
வருடத்தை எட்டியது அவன் நடக்க முயற்சித்தான். அவனைப் பார்த்த போது அவனால்
நடக்கவும்
முடியாத அங்கவீனம் என்பது தெரியவந்தது. அது என்னுள்ளத்தில் இன்னும் சுமையை
அதிகரித்தது.
அவனுக்குப் பின்னால் என் மனைவி உமரையும் காலிதையும் பெற்றெடுத்தாள். வருடங்கள்
கழிந்தன ஸாலிமும் பெருத்து ஆளானான். அவனுடைய இரு சகோதரர்களும் அவ்வாறே
வளர்ச்சியடைந்தார்கள். அதிகமாக வீட்டிலிருப்பதை நான் விரும்பவில்லை.
எந்நேரமும் என்
நண்பர்களுடனேயே இருந்தேன். உண்மையில் நான் என் நண்பர்களின் கையில் ஒரு
விளையாட்டுப்
பொருளைப்போன்றே இருந்தேன். ஆனால் என் மனைவி என்னைத் திருத்தும் முயற்சியில்
நம்பிக்கையிழக்கவில்லை. எனக்கு நேர்வழி கிடைப்பதற்காக எப்போதும் அவள் துஆ
செய்பவளாக
இருந்தாள். எனது மோசமான நடத்தைகளால் அவள் கோபமடையவில்லை. என்றாலும் நான் சாலிமைக்
கணக்கெடுக்காது அவனுடைய சகோதரர்கள் மீது கவனமெடுப்பதைப் பார்த்து அவள் அதிகம்
கவலையடைந்திருந்தாள்.
ஸாலிமும் வளர்ந்தான் அவனுடன் என் கவலையும் வளர்ந்தது. எனது மனைவி அவனை அங்கவீனர்
பாடசாலையொன்றில் சேர்க்குமாறு என்னிடம் வேண்டியபோது நான் அதை மறுக்கவில்லை. வேலை
செய்வதும் உறங்குவதும் சாப்பிடுவதும் இரவு நேர அரட்டை என்றும் எனது காலங்கள்
கழிந்தன. எனது கெட்ட நாட்கள் பற்றி நான் யோசிக்கவில்லை.
ஒரு வெள்ளிக்கிழமை தினமன்று பகல் நேரம் பதினொரு மணியளவில் நித்திரை விட்டெழுந்தேன்
நான் வலீமா ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் குறித்த நேரத்தைவிட முன்னர் நான்
விழித்திருந்ததன் காரணமாக நேரம் மிச்சமாயிருந்தது. ஆடையணிந்து வாசனை பூசி
வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக வீட்டின் வரவேற்பறையைக்கடந்து நான் சென்ற போது
ஸாலிமுடைய காட்சி என்னை நிறுத்தியது. ஸாலிம் அழுது கடந்து கொண்டிருந்தான்
ஸாலிமுடைய
குழந்தைப் பருவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் அவன் விடயத்தில் நான் கவனம்
செலுத்தியது இதுவே முதற்தடவையாகும்.
நான் அவன் பக்கம் பார்க்கவில்லை அவனை நான் காணாததுபோல் செல்ல முயற்சித்தேன் அவன்
தனது தாயை அழைக்கும் சத்தத்தை நான் கேட்டேன். ஏனெனில் நானும் அவ்வறையிலேயே
இருப்பேன் இருந்தும் நான் அவனை அன்பாய் தூக்கியது கூட இல்லை. அவனைப் பார்த்தேன்
அவனருகே சென்று ஸாலிம் எதற்காக அழுகிறாய் எனக்கேட்டேன் எனது ஓசையை அவன் கேட்டதும்
அழுகையை நிறுத்திவிட்டான் நான் அவனருகே இருப்பதை அவன் உணர்ந்ததும் தனது இரு சிறு
கைகளாலும் அவன் எதையோ தேட ஆரம்பித்தான். ‘நீ எதைத் தேடுகிறாய்” என நான் கேட்டேன்
அவன் என்னைவிட்டுத் தூரமாக முயற்சிக்கின்றான் என்பது எனக்குத்
தெரியவந்தது. ஏனெனில்
அப்போது இப்பொழுதா உனக்கு என்னைத் தெரிந்தது சென்ற 10 வருடங்களாக நீ
எங்கிருந்தாய்?
என்று அவன் பேசுவதுபோன்று இருந்தது. அவனது அறைக்குள் நுழைந்தான் நானும்
அவனைப் பின்
தொடர்ந்தேன் ஆரம்பத்தில் தனது அழுகைக்கான காரணத்தை என்னிடம் கூற அவன்
மறுத்துவிட்டான். அன்பாய் அவனிடம் விசாரித்தேன் ஸாலிம் தன் அழுகையின் காரணத்தைக்
கூற ஆரம்பித்தான் பணிவாய் அவன் பேச்சை செவிமடுத்தேன் என்ன காரணம் தெரியுமா? ஸாலிமை
பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் அவனுடைய சகோதரன் உமர் சற்று தாமதமாகிவிட்டான்
ஏனெனில் ஜும்ஆ தினமாகவிருந்ததால் முதல் வரிசையில் தனக்கு இடமில்லாது போயிருக்கும்
என்று ஸாலிம் பயந்தான். எனவேதான் உமரை அழைத்துள்ளான் தன் தாயை அழைத்துள்ளான்.
என்றாலும் யாரும் அவனுக்கு பதில் கூறவில்லை எனவே அழுதிருக்கிறான்.
அவனுடைய இரு கண்களுக்குமிடையில் வழிந்தோடும் கண்ணீரைப் பார்த்தேன். எஞ்சிய அவனுடைய
வார்த்தைகளைக் கேட்பதற்கு என்னால் முடியவில்லை. எனது கைகளை அவனுடைய வாயில் வைத்து
இதற்காகவா ஸாலிம் நீ அழுதாய் என நான் கேட்க அவன் “ஆம்” என்றான். என் நண்பர்களை
மறந்தேன் வலீமாவையும் மறந்தேன் ஸாலிம் நீ கவலைப்படாதே இன்று உன்னை யார் பள்ளிக்கு
அழைத்துச் செல்வதென்று உனக்குத் தெரியுமா என அவனிடம் வினவினேன் அவன் ‘உமர் என்னை
அழைத்துச் செல்வான் என்றாலும் அவன் எப்போதும் தாமதமாகவே செல்வான்” என்று
வருத்தத்துடன் கூறினான். ‘இல்லை நானே உன்னை அழைத்துச் செல்வேன்” எனச் சொன்னதும்
சாலிம் திடுக்கிட்டான். அவன் இதை நம்பவில்லைஇ நான் அவனைக் கேலி செய்வதாக நினைத்து
என்னிடம் என்னிடம் விளக்கம் கேட்டழுதான். அவன் கண்ணீரைத் துடைத்து அவன் கைகளைப்
பற்றி காருக்கு அவனை அழைத்துச் செல்ல முனைந்தேன் ‘பள்ளி பக்கத்தில்தான் இருக்கிறது
நான் நடந்தே செல்லவேண்டும்” என்று கூறி அவன் காரில் செல்ல மறுத்தான். அல்லாஹ்வின்
மீது ஆணையாக அவன் அவ்வாறே என்னிடம் சொன்னான் நான் கடைசியில் எப்போது பள்ளிக்குள்
நுழைந்தேன் என்பதை நான் மறந்துவிட்டேன். என்றாலும் இத்தடவை முதலாவதாக நான்
பள்ளிக்குள் நுழையும்போது என்னுள் பயத்தை உணர்கின்றேன். கடந்த பல வருடங்களாய் நான்
பள்ளிக்குச் செல்லாததை நினைத்து என்னை நானே நொந்து கொண்டேன். நாடி
நரம்புகளிலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் எனக்கோர் உணர்வு ஏற்பட்டது.
பள்ளிவாயல் முழுவதுமாய் சனம் நிறைந்து காணப்பட்டது. என்றாலும் ஸாலிமுக்காய் முதல்
வரிசையில் ஓரிடம் இருக்கத்தான் செய்தது இருவரும் ஜும்ஆ பிரசங்கத்தைக் கேட்டோம்.
அவன் எனக்கருகிலிருந்து தொழுதான் ஆனால் உண்மையில் நான் தான் அவனருகிலிருந்து
தொழுதேன். தொழுகை முடிந்ததும் ஸாலிம் என்னிடம் குர்ஆனை எடுத்துத் தருமாறு
வேண்டினான் நான் ஆச்சரியப்பட்டேன். ‘கண் தெரியாமல் எவ்வாறு குர்ஆனை ஓதப்போகிறான்”
நான் அவனைக் கணக்கெடுக்காதது போல் இருந்தேன் இருந்தாலும் அவன் உணர்வுகள்
பாதிக்கப்படக்கூடாதென்று குர்ஆனை எடுத்துக் கொடுத்தேன். சூரத்துல் கஹ்பை புரட்டித்
தருமாறு என்னிடம் அவன் வேண்ட ஒரு முறை பக்கங்களைப் புரட்டினேன் இன்னொருமுறை
சூராக்கள் அட்டவனையையும் புரட்டி குறித்த சூராவைத் தேடி எடுத்து அவனிடம்
கொடுத்தேன். குர்ஆனை எடுத்து தன் முன்னே வைத்த அவன் தன் கண்கள் மூடிய நிலையில்
சூரத்துல் கஹ்பை ஓத ஆரம்பித்தான். யா அல்லாஹ் அவன் அந்த சூராவை முழுமையாகப்
பாடமிட்டிருந்தான். நான் வெட்கப்பட்டேன்.
அல்குர்ஆனை எடுத்தேன் அந்த சூராவை மீண்டும் மீண்டும் ஓதினேன். என்னை மன்னித்து
எனக்கு நேர்வழிகாட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். என்னால் தாங்க முடியாது
குழந்தைகள் போன்று அழ ஆரம்பித்தேன். பள்ளியில் சில மனிதர்கள் ஸ{ன்னத் தொழுது
கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து நான் வெட்கமடைந்தேன். என் அழுகையை மறைக்க
முயற்சித்தேன் முடியாமல் தேமித் தேமி அழ ஆரம்பித்தேன். அவ்வேளை ஒரு சிறிய கை
என்னைத் தேடுவது போன்றும் பின்னர் அது என் கண்ணீரைத் துடைப்பது போன்றும்
உணர்ந்தேன். அது யாருமில்லை ஸாலிம்தான். அவனை என் நெஞ்சோடு அனைத்து
அவனைப் பார்த்து
‘நீ அல்ல குருடன் உண்மையில் நான்தான் குருடன்” என எனக்குள் நானே கூறிக்கொண்டேன்.
பின்னர் வீட்டுக்கு வந்தோம் என் மனைவி ஸாலிம் மீது பயம் கொண்டவளாய் காணப்பட்டாள்.
ஸாலிமுடன் நானும் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றிய விடயம் அவளுக்குத்
தெரிந்ததும் அவளின்
கவலை கண்ணீராய் மாறியது. அன்றைய தினத்திலிருந்து எந்தவொரு ஜமாஅத் தொழுகையையும்
பள்ளியில் நிறைவேற்றாமல் நானிருந்ததில்லை.
தீய நண்பர்களை வெறுத்தொதுக்கி பள்ளிவாயலில் நான் சந்தித்த நல்லவர்களுடன் தோழமை
கொண்டேன். அவர்களுடன் சேர்ந்து ஈமானின் சுவையை நான் உணர்ந்தேன் மறுமைக்காய் என்னை
அழைத்துச் செல்லும் விடயங்களை இனங்கண்டேன். எந்தவொரு வித்ர் தொழுகையும் என்னை
விட்டுத்தப்பிப் போகவில்லை. ஒரு மாதத்திலேயே குர்ஆனை பலமுறை முழுமையாய் ஓதி
முடித்தேன். நான் மக்களைக் கேலி செய்ததற்காகவும் புறம் பேசியதற்காகவும் அல்லாஹ்
என்னை மன்னிக்க வேண்டும். என்பதற்காய் எனது நாவு முழுவதும் அல்லாஹ்வை திக்ர்
செய்வதில் நனைந்திருந்தது. நான் என் குடும்பத்துடன் மிக நெருக்கமாயுள்ளேன் என்பதை
உணர்ந்தேன்.
நீண்ட நாட்களாய் என் மனைவியின் கண்களில் குடிகொண்டிருந்த அச்சமும்
கவலையும் மறைந்து
போயின. எந்நேரமும் என் மகன் ஸாலிமுடைய முகத்தில் புன்னகை வெள்ளமானது.
யார் இவற்றைக்
காண்பாரோ அவர் இவ்வுலகமே சொந்தமானது போன்ற ஒரு பிரமை சந்தோசத்தால் ஏற்படும்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்காய் அவனைப் புகழ்ந்தேன்.
ஒரு நாள் என் நல்ல நண்பர்கள் தூரப் பிரதேசமொன்றுக்குச் சென்று அழைப்புப் பணி செய்ய
வேண்டும் என்பதற்காய் பயணிக்க முடிவு செய்தார்கள். அந்தப் பயண விடயத்தில் நான்
தடுமாற்றத்திலிருந்தேன். அல்லாஹ்விடம் உதவி வேண்டினேன். என் மனைவியிடமும்
ஆலோசித்தேன் அனேகமாக அவள் இதற்கினங்கமாட்டாலென்றே நான் நினைத்தேன் ஆனால் நிலைமை
தலைகீழாய் மாறியது. அவளோ அதற்குச் சம்மதித்தாள். நான் மிகவும் ஆனந்தமடைந்தேன். என்
மனைவி எனக்கு மென்மேலும் உற்சாகமூட்டினாள் அவளிடம் எந்தவொரு ஆலோசனை பெறாமல் தீய
விடயங்களுக்காய் நான் பலமுறை பயணம் செய்ததை அவள் ஏற்கனவே கண்டிருக்கின்றாள்
ஸாலிமிடம் சென்று நான் பயணம் மேற்கொள்ளும் செய்தியைக் கூறினேன். என்னை
வழியனுப்புவதற்காய் என்னிரு கைகளையும் அவன் கைகளால் பற்றினான். மூன்றரை மாதங்களாய்
என் வீட்டைவிட்டும் நான் பிரிந்திருந்தேன். இக்காலங்களில் எனக்குச் சந்தர்ப்பம்
கிடைத்த போதெல்லாம் நான் என் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டேன். அவர்களுடன்
இரக்கப்பட்டேன் எத்தனை நேரம் நான் ஸாலிமுடன் இரக்கப்பட்டுப் பேசியிருப்பேன்? அவன்
குரலைக் கேட்பதற்கு எவ்வளவு நான் ஆசைப்பட்டிருப்பேன்! ஏனெனில் அவன் ஒருத்தனே நான்
பிரயாணம் செய்ததிலிருந்து என்னுடன் பேசவில்லை. ஏனென்றால் நான் தொடர்பு கொள்ளும்
போதெல்லாம் ஒன்றில் அவன் மத்ரஸாவிலிருந்தான் அல்லது பள்ளியிலிருந்தான் அவன் மேல்
எனக்கிருந்த பாசத்தை என் மனைவியிடம் நான் கூறும் போதெல்லாம் அவள் மிகவும்
சந்தோசப்பட்டவளாய் மெய்மறந்திருப்பாள்
கடைசியில் ஒருமுறை நான் அவளுடன் தொலைபேசியில் பேசியபோது வழமை போன்ற அவளின்
ஆனந்தச்சிரிப்பை நான் கேட்கவில்லை. அவளின் குரலில் மாற்றம் விளங்கியது. என்
‘ஸலாத்தை ஸாலிமுக்கு எடுத்துரையுங்கள்” என்று அவளிடம் கூறியதும் அதற்கவள் ‘இன்ஷா
அல்லாஹ்” என்று சொல்லி அமைதியானாள். இறுதியில் பிரயாணத்தை முடித்து வீட்டுக்கு
வந்தேன். கதவைத் தட்டினேன். ஸாலிம்தான் கதவைத் திறக்க வேண்டும் என நான்
ஆவலோடிருந்தேன் இருந்தாலும் என் இரு கைகளுக்கிடையில் நான் சுமந்து அனைக்கும் போது
வாப்பா என்று சொல்லி அழும் நான்கு வயதையெட்டாத என் மகன் காலிதை நினைக்கும் போது
உள்ளம் வலித்தது. வீட்டுக்குள் நான் நுழையும்போது எனதுள்ளம் ஏன் வேதனைப்பட்டது
என்பதை நான் அறியேன் ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவனாய்
வீட்டுக்குள் நுழைந்தேன் என் மனைவி என்னை வரவேற்றாள் அவள் முகமோ மாறியிருந்தது
என்றாலும் சந்தோஷமடைந்தவள் போல் தன்னை அவள் சுதாகரித்துக் கொள்வது எனக்கு
விளங்கியது உனக்கு என்ன நேர்ந்ததென்று அவளிடம் நான் கேட்டபோது ‘ஒன்றுமில்லை” எனப்
பதிலளித்தாள்.
திடீரென ஸாலிம் என் நினைவுக்கு வந்ததும் ‘ஸாலிம் எங்கே” என்று நான் அவளிடம் கேட்க
தன்னால் பதில் கூறமுடியாமல் தலை குனிந்தால் அவளின் கன்னங்களிலே கண்ணீர்த்துளிகள்
விழுந்தன. ‘ஸாலிம்! ஸாலிம் எங்கே” என்று சத்தமிட்டு நான் அவளிடம்
கேட்டபோது ‘வாப்பா
ஸாலிம் அல்லாஹ்விடமுள்ள சுவனத்துக்குப் போய்விட்டார்” என்ற என் மகன் காலிதின்
ஓசையைத்தான் என்னால் கேட்க முடிந்தது. என் மனைவியால் நிலைமையை தாங்கிக்கொள்ள
முடியவில்லை பொறுக்க முடியாமல் நிலத்தில் விழுமளவுக்கு அழுதாள். அறையிலிருந்து
வெளியேறினேன். நான் வருவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு ஸாலிமுக்குக் காய்ச்சல்
ஏற்பட்டு என் மனைவி அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போயுள்ளாள். அவனுக்கு காய்ச்சல்
கடுமையாகி அவள் அவனருகிலிருக்கும் போதே அவன் உயிர் பிரிந்திரிக்கின்றது என்ற
செய்தியை நான் அறிந்தேன்.

அடக்கஸ்தளங்கள் வணக்கஸ்தளங்களாக

அழ்ழாஹ் திருமறையில் கூறுகின்றான். இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள் ”நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 18:21)
கஹ்ப் அத்தியாயத்தில் இடம்பெறுகின்ற மேற்குறித்த வசனத்தின் மூலம் கப்ருகளின் மீது பள்ளிவாயல்களை எழுப்பலாம் என்பதை அறிய முடிகின்றதல்லவா? கப்ருகளின் மீது கட்டடம் கட்டும் நடைமுறை முன்னைய சமுதாய நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அழ்ழாஹ் இச்சம்பவத்தை அறிவிப்புச் செய்யும் போது இச்செயல் தடுக்கப்பட்ட செயல் என்று அறிவிக்காததினால் ‘முன் சென்றோரின் மார்க்கம் எங்களுக்கும் மார்க்கமாகும்’ என்ற சட்ட மூலாதாரத்திற்கு ஏற்ப இது தெளிவான ஆதாரமாக இருக்கின்றதே.
தெளிவு :
குறித்த வாதத்திற்கு சுருக்கமாக மூன்று விதங்களில் பதிலளிக்க முடியும்.
01.இஸ்லாமியர்களைப் பொருத்தமட்டில் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகள் மாத்திரமே மார்க்க, வேத ஆதாரங்களாக கொள்ளப்பட வேண்டும். இதனை திருமறையின் பல வசனங்களும், நபிகளாரின் பொன்மொழிகளும் எடுத்தியம்புகின்றன. ஆதாரத்திற்காக ஒரே ஒரு வசனத்தை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.
‘(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் 7:3)
இவ்விரண்டிற்கப்பால் இஜ்மா, கியாஸ், இஸ்திஹ்ஸான், ஸஹாபிகளின் சொந்தக் கூற்று, ஸலபிகளின் கூற்று, முன்வந்தோர்களின் மார்க்கம், ஊர் வழக்காறு, மத்ஹப் பிடிவாதம் போன்றவைகள் ஒரு காலமும் இறைவனின் மாரக்கத்தை தீரமானிக்காது. இவை ஒவ்வொன்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்த நமது தலைப்பு இடம் கொடுக்காததினால் நமது தலைப்போடு சம்பந்தப்பட்ட ‘முன்வந்தோர்களின் மார்க்கம்’ என்ற அம்சத்தை மாத்திரம் ஆதாரங்கள் அடிப்படையில் அலசுவோம்.
முன்வந்தோர்களின் மார்க்கம் எமக்கு மார்க்கமாகுமா? ஒரு காலமும் எமக்கு மார்க்கமாகாது. இது சட்டக்கலையில் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு அம்சமாகும். இதனை அறபியில் பின்வருமாறு அழைப்பர். شرع من قبلنا ليس شرعا لنا
அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை மாத்திரமே பின்பற்ற வேண்டும் என்ற இறை கட்டளையின் மூலமே இவ்விரண்டும் அல்லாதவைகள் மார்க்க மூலாதாரமாக இல்லை என்பதை விளங்கக் கூடியதாக இருந்தாலும் பிரத்தியேகமாக ‘முன்வந்தோரின் மார்க்கம்’ நமக்கு மார்க்க மூலாதாரம் இல்லை என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனமும் நபிகளாரின் ஆதாரபூர்வமான பொன்மொழியும் எடுத்துக் காட்டுகின்றன.
அழ்ழாஹ் திருமறையில் கூறுகிறான். ‘உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;’ (அல்குர்ஆன் 5:48)
ஆழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்சென்ற எந்த ஒரு நபிக்கும் கொடுக்கப்படாத ஐந்து சிறப்பம்சங்கள் தனக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டு, அதில் ஒரு அம்சமாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்றார்கள்.
ஜாபிர் பின் அப்திழ்ழாஹ் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: …ஒவ்வொரு நபியும் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கே அனுப்பப்பட்டுள்ளனர். நான் மாத்திரமே முழு மனித சமுதாயத்திற்குமாக அனுப்பப்பட்டுள்ளேன். …என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி-427)
மேற்குறித்த அல்குர்ஆன் வசனத்திலிருந்தும், ஆதாரபூர்வமான நபிமொழியிலிருந்தும் முன்வந்த சமூகத்தின் எந்த கிரியைகளும் நமக்கு மார்க்கமாகாது என்பதை விளங்க முடிகின்றதல்லவா? இது நாமாக சுயமாக கண்டுபிடித்த விளக்கங்கள் கிடையாது. எமக்கு முன்சென்ற இஸ்லாமிய அறிஞர்களும் இவ்வாறுதான் விளக்கம் சொல்லியுள்ளனர்.
02. மேற்குறித்த அதாவது, முன்சென்றோரின் மார்க்கம் எங்களுக்குரிய மார்க்கமே என்ற கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அவர்களது வாதப்படியே இது தவறானது என்பதுதான் யதார்த்தமாகும். ஏனெனில்; இதனை மார்க்க மூலாதாரமாக கருதுபவர்களிடத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அதாவது, ‘நமது மார்க்கத்தில் அதற்கு முரணான ஒரு செய்தி வராத வரையில்தான் முன்வந்தோர்களின் மார்க்கம் எங்களுக்குமுரிய மார்க்கமாகும்’ ஆனால் இந்நிபந்தனை, குறித்த நமது விடயத்தில் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றதே. நமது மார்க்கத்தில் கப்ருகளின் மீது பள்ளிவாயல்கள் எழுப்புவது தெளிவாக தடுக்கப்பட்டு விட்டதல்லவா? எனவே, முந்தைய மார்க்கத்தை நமது மார்க்கம் மாற்றி இருக்கும் போது இவ்வசனத்தை அவர்கள் ஆதாரமாக முன்வைப்பது வேடிக்கையாக இல்லையா?
03.இன்னும் சொல்லப்போனால் சூபிகள் தங்களது வாதத்திற்கு ஆதாரமாக முன்வைத்த குறித்த வசனத்திலிருந்து ‘முன்சென்றோரின் மார்க்கத்தில் கப்ருகளின் மீது இறை இல்லங்கள் எழுப்புகின்ற அனுமதி இருந்தது’ என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில், குறித்த வசனத்தில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் இறைவிசுவாசிகள் என்றோ, நபிக்கு வழிப்பட்டு நடந்தவர்கள் என்றோ எங்கும் இடம்பெறவில்லை. மாறாக, அவ்வசனத்தில் குறித்த விவாதத்தில் மிகைத்து வெற்றி பெற்றோர் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, இறை இல்லங்களின் மீது கப்ருகளை எழுப்பியதானது பலவந்தமாக மிகைத்து வெற்றிபெற்றோரின் செயலாகத்தான் இருக்கிறது. நல்லோர்களுக்கு பலவந்தமாக மிகைத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் கிடையாது. இது அவர்களின் பண்புமன்று. எனவே, எப்படிப்பார்த்தாலும் குறித்த வசனத்திலிருந்து பெரும்பாவத்தை நியாயப்படுத்தக்கூடிய இவர்களது அக்கிரம செயலுக்கு இம்மியளவு கூட ஆதாரம் இல்லை என்பதை அறிவுள்ளோர்கள் உணர்ந்து கொள்ளலாம்.
சந்தேகம்: 02
நபியவர்களின் அடக்கஸ்தலமே புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியிலே அல்லவா இருக்கிறது. மஸ்ஜிதுன் நபவியின் நிலை என்ன?
தெளிவு:
இச்சந்தேகம் நியாயமாக பலருக்கும் எழுகின்ற சந்தேகம்தான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதனால்தான் மக்கள் இலகுவில் நம்பும்படியான இச்சந்தேத்தை கிளப்பிவிட்டிருப்பதை பரவலாக பார்க்கின்றோம். ஆதலால் இதனை சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கிறது.
இன்று நாம் பார்க்கின்ற நபிகளாரின் கப்ரு அமைப்பு ஸஹாபாக்களின் காலத்தில் இருந்த அமைப்பு கிடையாது. மாறாக நபிகளாரது அறை, மஸ்ஜிதுந் நபவிக்கு அருகாமையில்தான் அமையப் பெற்றிருந்ததே அல்லாமல் மஸ்ஜிதிற்குள்ளே இருக்கவில்லை. அறைக்கும் பள்ளிக்குமிடையே ஒரு மதில் (சுவர்) பிரித்திருத்தது. அதன் வழியாகத்தான் நபிகளார் பள்ளிக்குச்சென்று வருபவர்களாக இருந்திருக்கிறார்கள். இது எல்லோராலும் அறியப்பட்ட வரலாற்று உண்மை. எனினும், நபிகளார் மரணித்தவுடன் அவர்களது அறையிலேயே அவர்களை நபித்தோழர்கள் அடக்கம் செய்திருந்தனர்.
காரணம், அவர்களது கப்ரின் மீது எந்த ஒரு இறையில்லமும் எழுப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக. அறைக்கு அருகாமையில் புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவி இருக்கும் போது அருகாமையில் இருக்கின்ற நபிகளாரின் மன்னறையில் இன்னுமொரு பள்ளி அமைக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தனர். ஆனால், அவர்கள் எதை அஞ்சினார்களோ அது அவர்களுக்குப்பின் நடந்தேறிவிட்டது. அதாவது, வலீத் பின் அப்துல் மலிக்கினது ஆட்சிக்காலத்திலே அவர் பள்ளியை விஸ்தீரனப்படுத்த விரும்பிய போது அதனை (பள்ளியை) இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு நபிகளாரின் மனைவியர்களின் அறைகளை பள்ளியோடு சேர்த்து விட்டார். இக்கட்டத்தில் ஆயிஷா நாயகியின் (நபிகளாரின் கப்ரு இருந்த) அறையும் பள்ளியோடு ஒன்றாகிவிட்டது. (ஆதாரம்: தாரீஹ் இப்னு ஜரீர்-05/222,223 தாரீஹ் இப்னு கதீர்-09ஃ74,75)
வலீத் பின் மர்வானின் இச்செயலை உரிமையோடு கண்டிப்பதற்கு அந் நேரத்தில் நபித்தோழர்கள் எவருமே இருக்கவில்லை. எனினும், சிலர் நபித்தோழர் ஒருவர் இருந்தார் என்று கருதுகின்றனர். ஆனால், அதில் எவ்வித உண்மையும் கிடையாது. கீழ்வரும் ஹாபிழ் முஹம்மத் பின் அப்துல் ஹாதீ அவர்களின் கருத்தை அவதானித்தால் நன்றாக புரிந்து விடும்.
‘மதீனாவிலே இருந்த அனைத்து நபித்தோழர்களும் மரணித்த பின்பே வலீத் பின் அப்துல் மலிகின் இவ்விஸ்தீரனப்பணி நடைபெற்றது. இறுதியாக மரணித்தவர் நபித்தோழர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள்தான். அவர் வலீதினுடைய தந்தை அப்துல் மலிகினது ஆட்சியிலேயே ஹிஜ்ரி 78ம் ஆண்டிலேயே மரணித்துவிட்டார். ஆனால் வலீத் ஆட்சியைப் பொறுப்பெடுத்தது ஹிஜ்ரி 86ம் ஆண்டிலேயாகும். (ஸாரிமுல் மன்கி:136)
எனவே, மேற்குறித்த ஆதாரபூர்வமான வரலாற்றுக் குறிப்பிலிருந்து வலீதின் இச்செயலுக்கும் நபித்தோழர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது நமக்கு புலனாகிறது. அல்குர்ஆனுக்கோ, அஸ்ஸுன்னாவிற்கோ, நபித்தோழர்களுக்கோ சம்பந்தமில்லாத வலீத் என்ற தனி மனித ஆட்சியாளனின் மார்க்கத்திற்கு முரணான செயல் ஒரு காலமும் மார்க்க ஆதாரமாக அமையாது என்பதை கவனத்திற் கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப்போனால். ஹுலபாஉர் ராஷிதீன் என்றழைக்கப்படக் கூடிய உமர், உத்மான் ஆகிய இரு நபித்தோழர்களும் இதே விஸ்தீரனப்பனியை மேற்கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர்களில் எவரும் நபிகளாரின் கப்ரை பள்ளிவாயலுக்குள் நுழைவிக்கவில்லை. இதன் மூலம் வலீத் செய்த இக்காரியம் தவறானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் விஸ்தீரனப்படுத்தும் போது நபிகளாரின் கப்ர் விடயத்தை மார்க்க அடிப்படையில் கையாண்டிருக்க வேண்டும். எனினும் அவர் அவ்வாறு செய்யவில்லை. (அழ்ழாஹ் அவரது பாவத்தை மன்னிப்பானாக!)
இப் பள்ளியின் விஸ்தீரனப்பணி இறைத் தூதரின் வழிகாட்டலுக்கு முரணாக இருக்கின்ற அதே நேரம் செய்த தவறில் முடிந்தளவு பேணுதலாக நடந்துள்ளனர். அதனால்தான் கப்ரின் மீது உயர்ந்த சுவரை கட்டி கப்ரு ஸியாரத் என்ற பெயரில் நடைபெறுகின்ற ஷிர்க், பித்அத்களை தடுக்கும் விதத்தில் அமைத்துள்ளனர். எனவேதான் இன்றைக்கும் அதற்கு முன்னால் ஷிர்க் பித்அத்களை தடுப்பதற்காக பாதுகாப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும், எது எவ்வாறிருப்பினும் அது தவறுதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
சந்தேகம்: 03
மஸ்ஜிதுல் ஹைப்க என்ற பள்ளிவாயலில் நபிகளார் அவர்கள் தொழுதிருக்கிறார்கள். ஆனால் அங்கே 70 நபிமார்களின் கப்ருகள் இருப்பதாக ஹதீத் இடம்பெற்றிருக்கிறதே?
தெளிவு:
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பள்ளியில் தொழுதுள்ளார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அங்கு 70 நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வரும் செய்தி பலவீனமானதாகும். அந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் பல அறிவிப்பாளர்கள் ஹதீத் கலை அறிஞர்களால் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். தேவை ஏற்படின் அவற்றை விரிவாக விளங்கப்படுத்துவோம்.
ஒரு வாதத்திற்கு அந்தஹதீத் ஆதாரபூர்வமானது என்று வைத்துக்கொண்டாலும் வெளிப்படையாக அப்பள்ளியில் எந்த ஒரு கப்ரும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவ்வாறான பலீனமான ஹதீத் ஒன்று அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் அது பற்றிய சிறு சந்தேகம் கூட தோன்றியிருக்காது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தமட்டில் வெளிரங்கங்களை வைத்தே எத்தீர்ப்பும் அளிக்கப்படும். இரகசியங்களுக்கு அந்த ரப்புல் ஆலமீனே பொறுப்பாளனாக இருக்கின்றான்.
எனவே, இதுவும் பலவீனமான வாதம் என்பது புலனாகிறது. இன்னும் சொல்லப்போனால் இவ்வாறான போலியான வாதங்களை முன்வைத்து இவர்கள் நாடவிரும்புவது கந்தூரி, ஆகுமாக்கப்படாத ஸியாரத் வழிமுறை, அவ்லியாக்களிடம் கையேந்திப் பிரார்த்தித்தல், கப்ரை வலம் வருதல், கப்ரை முத்தமிடல், கப்ரின் மீது மண்டியிடல், கப்ரை விழாக்கோலமாக மாற்றுதல் போன்ற ஷிர்க், பித்அத்கள் நடைபெறாமல் மஸ்ஜிதுல் கைப் தௌஹீதின் கோட்டையாக தூய்மையாக பாதுகாக்கப்பட்டிருப்பதிலிருந்தே அங்கே 70 நபிமார்களின் கப்ருகள் இல்லை என்பதை அறியமுடிகின்றதல்லவா? இருந்தாலும், அவற்றின் அங்க அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை.
சந்தேகம்: 04
இஸ்மாயீல் (அலை) அவர்களது கப்ரு புனிதமிக்க மஸ்ஜிதுல் ஹராமிலே இருப்பதாக சில செய்திகள் இடம்பெருகின்றனவே?
தெளிவு:
இஸ்மாயில் (அலை) அவர்களது கப்ரோ அவர்கள் அல்லாத வேறு எந்த ஒரு நபியின் கப்ரோ புனிதமிக்க ஆலயத்தில் கிடையாது. எந்த ஒரு ஹதீத் கிரந்தங்களிலும் ஆதாரபூர்வமாக இவ்வாறான செய்தி பதிவு செய்யப்படவில்லை. மாறாக நபிகள் நாயகத்தோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத சில செய்திகள் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை கூட ஆதாரத்திற்கு எடுக்க முடியாத மிக பலவீனம் வாய்ந்த செய்திகளே. விரிவை அஞ்சி தவிர்க்கின்றேன்.
அடுத்து, ஒரு வாதத்திற்கு புனித பள்ளியில் கப்ருகள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அவை வெளிரங்கத்தில் தென்படாததால் எவ்விதப்பாதிப்பும் இல்லை. இங்கே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் கப்ருகளின் மீது பள்ளிவாயல்கள் எழுப்பட்டிருக்கிறதா? என்பதுதான். கப்ரின் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் பூமிக்கு கீழே இருந்தால் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. மற்றும், மேற்குறித்த தடைக்குள் உள்ளடங்கவுமாட்டாது.
சந்தேகம்: 05
நபி அவர்களின் காலத்தில் அபூ ஜன்தல் (ரழி) அவர்கள் அபூ பஸீர் (ரழி) அவர்களின் கப்ரில் பள்ளிவாயல் கட்டியிருக்கிறார்கள் அல்லவா?
தெளிவு:
குறித்த தகவலை இப்னு அப்தில் பர் அவர்கள் மாத்திரமே ‘இஸ்தீஆப்’ என்ற கிரந்தத்தில் அபூ பஸீரின் வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி குறிப்பிடும்போது இந்த தகவலை இடம்பெறச் செய்திருக்கிறார். ஆனால் அது ஆதாரத்திற்கு நிற்காத செய்தியாகும். ஒரு வாதத்திற்கு அந்த செய்தி ஆதாரபூர்வமானது என வைத்துக் கொண்டாலும் அந்த செய்தியை ஆதாரமாகக்கொண்டு, ஏனைய தெளிவாக தடைசெய்து வருகின்ற ஆதாரபூர்வமான ஹதீகளை தட்டிவிட முடியாது. காரணம், இந்த சம்பவ நிகழ்வை நபிகளார் பார்த்து அங்கீகரித்ததாக எங்கும் இல்லை. அப்படித்தான் அண்ணலார் அங்கீகரித்தார்கள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் அது தடைசெய்யப்படுவதற்கு முன்னால் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நபிகளார் மரணப்படுக்கையில் இருக்கும் போது கூட இது பற்றி எச்சரிக்கை செய்து தடுத்திருக்கின்றார்கள் என்று ஆதார பூர்வமான நபிமொழிகள் இடம்பெறும் போது அவற்றை தூக்கி எரிந்து விட்டு வேறு சட்டம் எடுக்க முடியாது. இத்தனைக்கும் அது ஆதாரபூர்வமானது இல்லை என்பது வேறு விடயமாகும்.
இதற்கப்பால், நபித்தோழர்களே கப்ரு உள்ள இடத்தில் தொழுவதை தவிர்ந்தும், தடுத்தும் வந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான செய்திகள் இருக்கின்றன. தகவலிற்காக ஒரே ஒரு செய்தியை மாத்திரம் கீழே தருகின்றேன்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், கப்ருக்கு சமீபமாக தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ‘கப்ரு, கப்ரு’ என்பதாகச் சொன்னார்கள். அவர் கப்ரு என்று சொன்னதை ‘கமர்’ (சந்திரன்) எனக் கருதி வானத்தை நோக்கி எனது பார்வையயை உயர்த்தினேன். (முஸன்னப் இப்னு அபீ ஷைபா: 10ஃ316)
இங்கே மற்றுமொரு விடயம் என்னவென்றால், சிலர் நபியவர்களின் கப்ரின் மீது ‘குப்பா’ எழுப்பப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அவ்லியாக்கள், நாதாக்களின் கப்ருகளில் குப்பாக்களை எழுப்புகின்றனர். ஆனால் நபியவர்களோ தனது கப்ரின் மீது குப்பா எழுப்ப வேண்டுமென்று எந்த ஒரு வஸிய்யதும் செய்யவில்லை. அவ்வாறே, நபிகளார் சிறப்பித்துக் கூறிய எந்த ஒரு நூற்றாண்டிலும் இவ்வாறு நபியவர்களின் கப்ரின் மீது குப்பா எழுப்பப்டவில்லை. அதற்குப் பின்னர்தான் மார்க்கம் தெரியாத பித்அத்வாதிகளினால் எழுப்பப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் எங்களது மார்க்கத்தில் இல்லாத புதுமையான காரியத்தை உருவாக்கிறாரோ அது நிராகரிக்கப்படும். (புஹாரி:2550)
மேலும், அலி (ரழி) அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். (அதாவது) எந்த ஒரு சிலுவையையும் தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே, மற்றும் பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1662)
மேற்குறித்த செய்திலிருந்து கப்ருகளை உயர்த்திக் கட்டுவது எவ்வளவு படுபயங்கரமான பாவம் என்பதை உணர முடிகின்றதல்லவா?
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
இன்னும் சில வாதங்கள் இருக்கின்றன. எனினும் அவை பெரிதாக நமது சமூகத்தில் பிரச்சாரம் செய்யப்படாததால் அவற்றை இங்கு தவிர்த்துவிட்டோம். கப்ருகள் இருக்கின்ற பள்ளிவாயல்களில் எக்காரணம் கொண்டும் நாம் தொழுதுவிடக் கூடாது. இவ்விடயத்தில் அலட்சியம் செய்து நாம் தொழுகின்ற தொழுகைகளை பாழ்படுத்திவிடக் கூடாது என்று எனதருமை சகோதர சகோதரிகளுக்கு நஸீஹாவாக கூறிக்கொள்கின்றேன்.
அடுத்து, நமது இக்கருத்தே நான்கு மத்ஹபினரின் கருத்துமாக இருப்பதால் ஒவ்வொரு இமாம்களையும் தனித்தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ஆதாரத்திற்காக இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கூற்றை மாத்திரம் கோடிட்டுக்காட்டி நிறைவு செய்கின்றேன்.
‘மக்காவில் இருந்த கவர்னர்கள் கப்ருகளின் மீது எழுப்பப்பட்டிருந்த கட்டங்களை தரைமட்டமாக்குவதை நான் (நேரடியாக) பாரத்தேன். புகஹாக்களில் எவரும் இச்செயலை குறை கூறவுமில்லை. (கூடாத ஒன்றாக இருந்தால் தடைசெய்திருப்பார்கள்.) (ஆதாரம்: அல் ஹாவில் கபீர்-39ஃ128)
சத்தியத்தை சத்தியமாக அறிந்து அதனை நடைமுறைப்படுத்தவும் அசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கும் வல்ல அழ்ழாஹ் அருள்புரிவானாக.
நிறைகள் அனைத்தும் இறைவனைச்சாரும், குறைகள் அனைத்தும் என்னைச்சாரும்
அழ்ழாஹ்வின் அருளை ஆதரவு வைக்கும் இறையடியான்
மௌலவி MFM சிபான் (பலாஹி)

வெங்காயத்தின் பலன்கள்

வெங்காயத்தின் பலன்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது.

இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் :


இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -
‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி
வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: -
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)
முதியவரின் இளமை: -
“முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
மனிதர்களோடு வளரும் ஆசைகள்: -
“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி
நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: -
இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி
பொறுமைக்குப் பிரதிபலன் சொர்க்கம்: -
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்:
இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
மறுமையை மறக்கடிக்கும் உலகத்தின் செல்வம்: -
‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), ஆதாரம் : புகாரி
செல்வத்துக்கு அடிமையானவன் துர்பாக்கியவான் ஆவான்: -
“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
“ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி
நம்முடைய செல்வம் எது?
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி
மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்: -
‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).
போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும்: -
“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள். . அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
நன்றியுள்ள அடியாரின் செயல்: -
நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். அறிவிப்பவர்: முஃகீரா இப்னு ஷ{அபா(ரலி), ஆதாரம் : புகாரி
விசாலமான அருட்கொடை எது?
அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்)
அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), ஆதாரம் : புகாரி

விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!
“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
சொர்க்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்கள்!
“தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) , ஆதாரம் : புகாரி
அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி
விருந்தினரைக் கண்ணியப்படுத்துங்கள்!
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் அடங்கும் அப்போது அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்றார்கள். அறிவிப்பவர்:அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி), ஆதாரம் : புகாரி
பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசினால்?
“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?
“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
இறையச்சத்தால் குறைவாக சிரி! நிறைய அழு!
“நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
சொர்க்கம், நரகம்!
“மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
செல்வத்தில் கீழானவர்களை நினைத்துப்பார்: -
“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்றது: -
“(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி
சொர்க்க வாசியா அல்லது நரகவாசியா என தீர்மானிப்பது எது?
“(கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்” அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி), ஆதாரம் : புகாரி
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்:
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்

12/13/2010

கோபம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி ரழி (அபூதாவூத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி ரழி (அபூதாவூத்)

ஜும்மா தொழுகை

ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆ கடமை
''ஜும்ஆ நாளில் தொழுகைக்கு அழைக்கப்பட்டதும் அல்லாஹ்வை நினைவு கூர விடுங்கள்! வியாபாரத்தைவிட்டு விடுங்கள்! இதுதான் உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் இதை அறிந்து கொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 62:09) என்று அல்லாஹ் கூறினான்.
876. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு åதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பகுதி 2
ஜும்ஆ தினத்தில் குளிப்பதன் சிறப்பும் சிறுவர்களுக்கும் பெண்களும் ஜும்ஆ கடமையா என்பதும்.
877. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்''
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
878. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து 'ஏனிந்தத் தாமதம்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்' என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) 'உளூ மட்டும்தான் செய்தீரா? நபி(ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!'' என்று கேட்டார்கள்.
879. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.''
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
பகுதி 3
ஜும்ஆவுக்காக நறுமணம் பூசுவது.
880. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
''ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் 'குளிப்பது அவசியம்' என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது' என்று குறிப்பிட்டார்கள்.
பகுதி 4
ஜும்ஆவின் சிறப்பு
881. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராம்ப் போதனையைக் கேட்கிறார்கள்.''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பகுதி 5
882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வந்தார். தொழுகைக்கு ஏன் தாமதமாக வருகிறீர்?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் பாங்கைக் கேட்டதும் உளூச் செய்வதற்குத் தவிர (குளிப்பதற்கு) நேரமில்லை' என்றார். அதற்கு, 'உங்களில் ஒருவ்h ஜும்ஆவுக்குச் செல்வதாயிருந்தால் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் கேள்விப் படவில்லையா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள்.
பகுதி 6
ஜும்ஆவுக்காக எண்ணெய் தேய்ப்பது.
883. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.''
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.
884. தா¥ஸ் அறிவித்தார்.
''ஜும்ஆ நாளில் உங்களுக்குக் குளிப்புக் கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சிலர் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு குளிப்பைப் பொறுத்த வரை சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது' என்று விடையளித்தார்கள்.
885. தா¥ஸ் அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறியபோது நறுமணப் பொருளோ எண்ணெய்யோ ஒருவரின் இல்லத்தில் இருந்தால் அதைப்பூசிக் கொள்ள வேண்டுமா?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'எனக்குத் தெரிய வில்லை' என்று விடையளித்தார்கள்.
பகுதி 7
இருப்பவற்றில் அழகானதை அணிவது.
886. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். ''மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது'' என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.
பகுதி 8
ஜும்ஆ நாளில் பல்துலக்குவது.
நபி(ஸல்) அவர்கள் பல் துலக்குவார்கள் என அபூ ஸயீத்(ரலி) கூறினார்.
887. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''என் சமுதாயத்திற்குச் சிரமமாம் விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
888. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.
பகுதி 9
பிறரின் பல் துலக்கும் பொருளால் பல் துலக்குவது.
890. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில்) அபூ பக்ருடைய மகன் அப்துர் ரஹ்மான் வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்தும் குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) 'அப்துர் ரஹ்மானே! அந்தக் குச்சியைக் கொடுப்பீராக! என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டி, மென்று நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பகுதி 10
ஜும்ஆ நாளில் ஃபஜ்ர் தொழுகையில் ஓத வேண்டியவை.
891. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் 'அலிஃப் லாம் மீம் ஸஜ்தா'வையும் 'ஹல்அதா அலல் இன்ஸான்' என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.
பகுதி 11
நகரங்களிலும் கிராமங்களிலும் ஜும்ஆ நடத்தலாம். 
892. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நடத்தப் பட்ட ஜும்ஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல் கைஸ் பள்ளியில்தான் முதன்முதலாக ஜும்ஆ நடந்தது.
893.åனுஸ் அறிவித்தார்.
அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு »ஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு »ஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.
''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.''
''ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'' என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
பகுதி 12
ஜும்ஆவுக்கு வராத சிறுவர் மற்றும் பெண்களின் மீது குளிப்பு அவசியமா?
யாருக்கு ஜும்ஆ கடமையோ அவரே குளிப்பது அவசியம் என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்கள்.
894. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்.''
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
895. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.''
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
896. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு åதர்களுக்கு அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
897. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஏழு நாள்களுக்கு தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
898. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஏழு நாள்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமையாகும்.''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பகுதி 13
899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள்.''
இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
900. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.
பகுதி 14
மழையின்போது ஜும்ஆவுக்குச் செல்லாமலிருக்க அனுமதி.
901. அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்.
பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுகள் என்று கூறும்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது 'என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்' என்று நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை' என்றும் குறிப்பிட்டார்கள்.
பகுதி 15
எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜும்ஆவுக்கு வர வேண்டும்? எவர் மீது ஜும்ஆ கடமை?
அல்லாஹ் கூறினான்:
''ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் இறைவனை நினைவு கூர விரையுங்கள்.''
ஜும்ஆ நடைபெறும் ஊரில் தொழுகைக்கான அழைப்பை நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் தொழுகைக்குச் செல்வது உனக்குக் கடமையாகும் என அதாஃ கூறுகிறார். அனஸ்(ரலி) தம் மாளிகையில் இருக்கும்போது ஜும்ஆத் தொழுவார்கள். சில பொழுது ஜும்ஆத் தொழ மாட்டார்கள். அனஸ்(ரலி) உடைய மாளிகை (பஸரா நகரின் எல்லையிலுள்ள) ஸாவியா எனுமிடத்திலிருந்து இரண்டு பர்ஸக் (சுமார் ஆறு மைல்கள்) தொலைவில் இருந்தது.
902. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங் களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதி யும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும்போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.
பகுதி 16
சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் ஜும்ஆ நேரம் வந்து விடுகிறது.
உமர், அலீ, நுஃமான் இப்னு பஷீர், அம்ர் இப்னு ஹுரைஸ் ஆகிய நபித்தோழர்களின் வழியாக இக்கருத்து அறிவிக்கப் படுகின்றது.
903. யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ர்hவிடம் கேட்டேன். அதற்கு அம்ர்h 'அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது' என ஆயிஷா(ரலி) கூறினார் என விடையளித்தார்.
904. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
சூரியன் சாயும் நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
905. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) முற்பகல் உறக்கம் கொள்வோம்.
பகுதி 17
ஜும்ஆ நாளில் வெயில் கடுமையாக இருக்கும்போது என்ன செய்வது?
906. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கம்போது ஜும்ஆத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள். கோடை கடுமையாக இருக்கும்போது ஜும்ஆவைத் தாமதமாக்குவார்கள்.
åனுஸ் இப்னு புகைர் அறிவிக்கும் ஹதீஸில் ஜும்ஆ என்று கூறாமல் தொழுகை என்று கூறுகிறார்.
பிஷ்ரு இப்னு ஸாபித் அறிவிக்கும் ஹதீஸில் 'எங்களுக்கு அமீர் ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு அனஸ்(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் எப்போது லுஹர் தொழுவார்கள்' என்று விசாரித்தார். (அதற்குத்தான் அனஸ்(ரலி) மேற்கண்டவாறு விடையளித்தார்கள்)' எனக் குறிப்பிடுகிறார்.
பகுதி 18
ஜும்ஆவுக்காக நடந்து வருவது.
''ஜும்ஆ நாளில் தொழுகைக்கு அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு வர விரையுங்கள்' என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 62:09)
விரையுங்கள் என்றால் அதற்காகச் செல்வதும் அதைச் செயல் படுத்துவதுமாகும் என்றுசிலர் விளக்கமளித்துள்ளனர். அந்த நேரத்தில் வியாபாரம் செய்வது விலக்கப்பட்டது என்று இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிட்டுள்ளார்கள்.
எல்லா விதமான கொடுக்கல் வாங்கலும் விலக்கப்பட்டது என அதாஃ குறிப்பிடுகிறார்.
ஒருவர் பயணியாக இருக்கும்போது ஜும்ஆ நாளில் பாங்கு சொல்பவர் பாங்கு கூறினால் ஜும்ஆவுக்குச் செல்வது அவரின் மீது கடமையாகும் என்று ஸுஹ்ரீ குறிப்பிடுகிறார்.
907. அபாயா இப்னு ரிஃபாஆ அறிவித்தார்.
நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது 'இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
908. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
909. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''என்னை நீங்கள் காணும் வரை (தொழுவதற்காக) எழாதீர்கள்! நிதானத்தைப் கடைப்பிடியுங்கள்.''
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
பகுதி 19
ஜும்ஆ நாளில் (பள்ளிவாயலில் அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்கக்கூடாது.
910. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி, (ஜும்ஆவுக்குப்) புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப் பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்.''
என ஸல்மான் அல் ஃபார்ஸி(ரலி) அறிவித்தார்.
பகுதி 20
ஜும்ஆ நாளில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் அமரக் கூடாது.
911. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.
ஜும்ஆவிலா? என்று நாஃபிவு இடம் தாம் கேட்டபோது, ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத மற்ற சமயங்களிலும் தான்' என்று நாஃபிவு விடையளித்ததாக இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.
பகுதி 21
ஜும்ஆவின் பாங்கு
912. ஸாயிப் இப்னு யªத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.
பகுதி 22
ஜும்ஆ நாளில் ஒரு முஅத்தினே பாங்கு சொல்லவேண்டும்.
913. ஸாயிப் இப்னு யªத்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் மூன்றாவது அறிவிப்பை அதிகப் படுத்தியவர் உஸ்மான்(ரலி) ஆவார். மதீனாவாசிகள் பெருகியபோது (இவ்வாறு செய்தார்கள்) நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு முஅத்தின் மட்டுமே இருந்தார். இமாம் மிம்பரில் அமர்ந்த நேரத்தில் ஜும்ஆவின் பாங்கு அமைந்திருந்தது. 
பகுதி 23
பாங்கைக் கேட்கும்போது மிம்பரில் அமர்ந்துள்ள இமாமும் அதற்குப் பதில் கூற வேண்டும்.
914. அபூ உமாமா(ரலி) அறிவித்தார்.
முஆவியா(ரலி) மிம்பரில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். அவர் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று கூறியதும் முஆவியா(ரலி)வும் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றார்கள்.
முஅத்தின் 'அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியதும் 'நானும் (அவ்வாறே நம்புகிறேன்)' எனக் கூறினார்கள். முஅத்தின் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்' எனக் கூறியதும் 'நானும்' என்றார்கள்.
பாங்கு சொல்லி முடித்தும், 'மக்களே! முஅத்தின் பாங்கு சொன்னபோது நான் கூறிய இதே வார்த்தையை இதே இடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்று முஆவியா(ரலி) குறிப்பிட்டார்கள்.
பகுதி 24
பாங்கு சொல்லும்போது இமாம் மிம்பரில் அமர்ந்திருக்க வேண்டும்.
915. ஸாயிப் இப்னு யªத்(ரலி) அறிவித்தார்.
மக்கள் பெருகியபோது ஜும்ஆ நாளின் இரண்டாம் அறிவிப்பை உஸ்மான்(ரலி) ஏற்படுத்தினார்கள். (அதற்கு முன்னர்) இமாம் அமரும்போது பாங்கு சொல்வது மட்டுமே இருந்தது.
பகுதி 25
குத்பாவின்போது பாங்கு சொல்வது.
916. ஸாயிப் இப்னு யªத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்அ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இத நிலைபெற்றுவிட்டது.
பகுதி 26
மிம்பர் மீது நின்று சொற்பொழிவு நிகழ்த்துவது.
நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது நின்று சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் என்று அனஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.
917. அபூ ஹாஸிம் இப்னு தீனார் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை அறிவேன். அது தயாரிக்கப் பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் -- அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள். ஆளனுப்பி 'நான் மக்களிடம் பேசும்போது அமர்ந்து கொள்வதற்காகத் 'தச்சு வேலை தெரிந்த உன்வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்!'' எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப்பட்டது.
அதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் மீதே தொழுததை - அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூவு செய்ததையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்துவிட்டு மீண்டும் மேலேறியதையும் - நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி 'மக்களே நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவும் என் தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்'' என்று குறிப்பிட்டார்கள்.
918. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நின்று கொள்வதற்காகப் பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்று இருந்தது. மிம்பர் செய்யப்பட்ட பின் அந்தப் பேரீச்ச மரக்கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியுற்றோம். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அதன் மீது தம் கையை வைக்கும் வரை (அந்தச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது).
919. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
''ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்'' என்று மிம்பரில் நின்று உரையாற்றும்போது நபி(ஸல்) கூறினார்கள்.
பகுதி 27
நின்ற நிலையில் உரையாற்றுவது.
920. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி(ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர்.
பகுதி 28
இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது அவர் மக்களையும் மக்கள் அவரையும் முன்னோக்குவது.
இப்னு உமர்(ரலி), அனஸ்(ரலி) ஆகியோர் இமாமை முன்னோக்குபவர்களாக இருந்துள்ளனர்.
921. அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மிம்பர் மீது அமர்ந்தனர். நாங்கள் (கீழே) அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.
பகுதி 29
இறைவனைப் புகழ்ந்த பின் 'அம்மாபஃது' என்று கூறுவது.
நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ளனர்.
922. அஸ்மாழூழூ(ரலி) அறிவித்தார்.
மக்கள் (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தபோது நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று மக்களுக்கு என்று அவர்களிடம் கேட்டேன். ஆயிஷா(ரலி) தம் தலையால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். இது ஏதாவது அடையாளமா? என்று கேட்டேன். 'ஆம்' எனத் தலையால் சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்குத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் நன்கு நீட்டினார்கள். என் விலாப் புறத்தில் தண்¡ர் நிரம்பிய தோல்பை ஒன்றிருந்தது. அதைத் திறந்து (மயக்கம் நீங்க) என் தலையில் தண்¡ரை ஊற்றிக் கொண்டேன். கிரகணம் நீங்கியபோது நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு 'அம்மாபஃது'' என்று கூறினார்கள்.
அன்ஸாரிப் பெண்களில் சிலர் கூச்சலிட்டனர். அவர்களை அமைதிப் படுத்துவதற்காக நான் சென்றேன். பின்னர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் என்ன உரையாற்றினார்கள் என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
''என்னுடைய இந்த இடத்தில் சொர்க்கம், நரகம் உட்பட நான் இது வரை காணாத அனைத்தும் எனக்குக் காட்டப் பட்டன. மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் குழப்பத்துக்கு நிகரான குழப்பத்துக்கு நீங்கள் உள்ளாவீர்கள். உங்களில் ஒருவரிடம் 'இந்த மனிதரை நபி(ஸல்) அவர்களைப் பற்றி நீ என்ன அறிந்திருக்கிறாய்' என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு நம்பிக்கையாளர் உறுதியிலிருந்தவர் 'இவர்கள் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள். எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழிகளையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவரின் அழைப்பை நம்பி ஏற்றோம்; அவரை நம்பிப் பின் பற்றினோம்' எனக் கூறுவார். அவரிடம் 'நல்லவராக உறங்குவீராக! நீர் (உலகில் இருந்த காலத்தில்) இவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தீர் என்பதை நிச்சயமாக நாமறிவோம்' எனக் கூறப்படும். 'இம்மனிதரைப் பற்றி நீர் அறிந்திருந்தது என்ன' என்று கேட்கப்படும்போது நயவஞ்சகன் சந்தேகத்திலிருந்தவன் 'இவரைப் பற்றி எனக்குத் தெரியாது; மக்கள் ஏதோ சொன்னார்கள்; நானும் சொன்னேன்' எனக் கூறுவான்'' என்று நபி(ஸல்) உரையாற்றினார்கள்.
923. அம்ர் இப்னு தக்லீபு(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் சில பொருள்கள் அல்லது கைது செய்யப் பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுப் பங்கிட்டுக் கொடுத்தபோது சிலருக்குக் கொடுத்தும் வேறு சிலருக்குக் கொடுக்காமலும்விட்டுவிட்டனர்.
யாருக்குக் கொடுக்காமல்விட்டுவிட்டார்களோ அவர்கள் குறை கூறுவதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது, 'அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு 'அம்மாபஃது' எனக் கூறி 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சிலருக்குக் கொடுக்கிறேன். (கொடுக்காமல்) யாரைவிட்டு விடுகிறேனோ அவர் நான் கொடுப்பவரை விட எனக்கு விருப்பமானவர். அவர்களின் உள்ளத்தில் அதிர்ச்சியும் பயமும் இருப்பதை நான் அறிந்த காரணத்தினாலேயே நான் சிலருக்குக் கொடுக்கிறேன். வேறு சிலரின் உள்ளங்களில் போதுமென்ற பண்பையும் நல்ல குணத்தையும் அவர்களைவிட்டு விடுகிறேன். இவர்களில் அம்ர் இப்னு தக்லீபும் ஒருவராவார்'' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக, நபி(ஸல்) அவர்கள் என்னைப் பற்றிக் கூறிய இந்த வார்த்தை சிகப்பு நிற ஒட்டகம் எனக்குக் கிடைப்பதை விட விருப்பமானதாக அமைந்தது.
924. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதனர். காலையில் இது பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் பள்ளியில் மக்கள் மேலும் அதிகமானார்கள். நபி(ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்ததும் மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானர்கள்.
நான்காம் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்தால் பள்ளி இடம் கொள்ளவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஃபஜ்ருத் தொழுகையை முடித்த பின் மக்களை நோக்கி இறைவனைப் புகழ்ந்து 'அம்மா பஃது' எனக் கூறிவிட்டு 'நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் இரவுத் தொழுகை கடமையாக்கப் பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாது போய் விடுமோ என்று அஞ்சினேன். (இதனால்தான் இரவு நான் வரவில்லை)'' என்று கூறினார்கள்.
925. அபூ ஹுமைத் அஸ்ஸாயிரு(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மாலைப் பொழுதில் எழுந்து ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டுப் பிறகு 'அம்மா பஃது'' என்றார்கள்.
926. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று ஏகத்துவ உறுதிமொழி கூறிவிட்டு 'அம்மா பஃது'' என்று கூறி(த் தம் சொற்பொழிவைத் துவக்கி)யதை செவியுற்றுள்ளேன்.
927. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள். தம் தோள் புஜத்தின் மீது மேலாடையைச் சுற்றிக் கொண்டு, கருநிறத் துணியால் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் அமர்ந்த கடைசி அமர்வாகும் அது.
பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, 'மக்களே என்னருகே வாருங்கள்'' என்றதும் மக்கள்அவர்களை நோக்கி விரைந்து நகர்ந்தனர். பிறகு 'அம்மா பஃது' எனக் கூறினார்கள். அதன் பின்னர் 'மற்ற மக்கள் பெருகும்போது, இது அன்ஸார்கள் எண்ணிக்கையில் குறைவார்கள். முஹம்மதுடைய சமுதாயத்தவர்களில் பொறுப்புக்கு வருகிறவர் யாருக்காவது நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற்றால் நல்லவர்களிடமிருந்து (நல்லவதை) ஏற்று அவர்களில் கெட்டவர்களை அலட்சியம் செய்து விடவும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பகுதி 30
ஜும்ஆ நாளில் இரண்டு சொற்பொழிவுகளுக்கிடையே அமர்வது.
928. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
928. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். அவ்விரண்டுக்குமிடையே அமர்வார்கள்.
பகுதி 31
சொற்பொழிவைச் செவிதாழ்த்திக் கேட்பது.
929. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''ஜும்அ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும் அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும் அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பகுதி 32
இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வருவதை இமாம் கண்டால், அவரை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிடுவது.
930. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!'' என்று கூறினார்கள். 
பகுதி 33
இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது வருபவர் சிறிய அளவில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
911. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நீர் தொழுது வீட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். '(எழுந்து) இரண்டு ரக்அத் தொழுவீராக!'' என்று கூறினார்கள்.
பகுதி 34
சொற்பொழிவின்போது இரண்டு கைகளையும் உயர்த்தவது.
932. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழிந்துவிட்டன. ஆடுகளும் அழிந்துவிட்டன. எங்களுக்கு மழை பொழிவிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் நீட்டித் பிரார்த்தித்தார்கள்.
பகுதி 35
ஜும்ஆச் சொற்பொழிவின் இடையில் மழை வேண்டிப் பிரார்த்திப்பது.
933. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்iயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.
(மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!'' என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.
பகுதி 36
வெள்ளிக் கிழமை இமாம் சொற்பொழிவு செய்யும்போது மவுனமாக இருப்பது.
தம் பக்கத்திலிருப்பவரிடம் 'மவுனமாக இரு' என்று எவரேனும் கூறிவிட்டால் அவர் பாழாம்விட்டார்.
இமாம் பேசும்போது வாய் மூடி இருக்க வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸல்மான்(ரலி) குறிப்பிட்டார்கள்.
934. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பகுதி 37
ஜும்ஆ நாளிலுள்ள சிறப்பான நேரம்.
935. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு'' என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை'' என்றும் குறிப்பிட்டார்கள். 
பகுதி 38
ஜும்ஆத் தொழுகை நடக்கும்போது சிலர் இமாமைவிட்டு விலம்னால் இமாமுடைய தொழுகையையும் அவருடன் சேர்ந்து தொழும் ஏனையோரின் தொழுகையும் செல்லத் தக்கதாகும்.
936. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ழூழூ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றி, ஒட்டகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், 'அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில்விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்'' (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் அருளப்பட்டது.
பகுதி 39
ஜும்ஆவுக்கு முன்பும் பின்பும் உள்ள தொழுகை
937. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.
பகுதி 40
''ஜும்ஆத் தொழுகை முடிக்கப் பட்டதும் பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்'' என்ற அல்லாஹ்வின் கூற்று.
938. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.
எங்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தம் விளை நிலத்தின் வாய்க்கால் ஓரத்தில் ஒரு வகை கீரைச் செடியைப் பயிரிடுவார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வேருடன் அச்செடியைப் பிடிங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் போடுவார். பிறகு அதன் மீது கோதுமையில் ஒரு கைப்பிடி அளவு போட்டு அரைப்பார் அந்தக் கீரைச் செடியின் தண்டுப் பகுதிதான் அந்த உணவுக்கே மாமிசம் போல் அமையும். நாங்கள் ஜும்ஆத் தொழுதுவிட்டுத் திரும்பி அவருக்கு ஸலாம் கூறுவோம். அவர் எங்களுக்கு உணவு படைப்பார். அதை நாங்கள் விழுங்குவோம். அவரின் இந்த உணவுக்காக நாங்கள் ஜும்ஆ நாளை விரும்புவோம்.
939. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆவுக்குப் பிறகுதான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும் காலை உணவையும் கொள்வோம்.
பகுதி 41
ஜும்ஆவுக்குப் பிறகு காலை உறக்கம் கொள்வது.
940. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆவுக்கு முற்பகலிலேயே சென்றுவிட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
941. ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆத் தொழுவோம். அதன் பிறகே முற்பகல் தூக்கம் நிகழும்.