Pages

9/06/2012

ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டுமா?!


இந்த அவசர யுகத்தில் மன அழுத்தம் ஏற்படுவது என்பது இயற்கையான ஒன்றாகிவிட்டது.. அலுவலகத்திலும் சரி , வீட்டிலும் சரி...ஏகப்பட்ட வேலைப்பளு காரணமாக மனம் அழுத்தம் ஏற்படவே செய்கிறது.


சரி, இதற்கு என்ன செய்யலாம்..!

இதோ தீர்வு உங்கள் கைகளில்.. உங்களிடத்தில் மட்டுமே..!
உங்களுக்குப் பிடித்தமான இசையைக் கேட்டு ரசிக்கலாம்..!

உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள்...! அவர்களின் நிலையில் இறங்கி விளையாடும் போது உங்களுக்கும் குழந்தை மனசு கட்டாயம் வந்திருக்கும்.

தினமும் யோகா செய்யுங்கள்...! ஏதாவது ஒரு நல்ல யோகப்பயிற்சி ஆசிரியரிடம் யோகா கற்றுக்கொள்ளுங்கள்!

நிறைய நேரம் செலவழிக்காமல் யோகமுறைகளின் மூலம் நீங்கள் மன நிம்மதியை அடையலாம்.

கோபத்தைக் குறைக்கலாம்!

பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்து விடுகிறது யோகா! தினமும் ஒருவருக்கு ஏதவாவது ஒருவகையில் உதவிடுங்கள்.. அதன் பலனை அனுபவியுங்கள்!

பிறர் மனம் புண்படும் பேசுவது யோகா மூலம் குறைகிறது..

உடல் ஆரோக்கியம் கிட்டுக்கிறது...

தியானிக்க் கற்றுக்கொள்ளுங்கள்.. தியான அது ஆழ்ந்த ஞானம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

சிரித்துப் பேசி பழக்க் கற்றுக்கொள்ளுங்கள்..!

ஆம்.. சிரிப்பு ஒன்றே தான் உங்களை எப்போதும் ஃபிரஷ்ஷாக வைத்திருக்கும் வழி!

நீங்கள் எப்போதும் பிரஷ்ஷாக இருப்பதால் உங்களை விரும்பக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்...!

நீங்கள் பிரஷ்ஷாக இருப்பதால் மற்றவர்களும் உங்களைத் பின் பற்றுவார்கள்!


நல்ல குணம், நல்ல செயல், நல்ல நட்பு என்றும் உங்களை ஹீரோவாகவே வைத்திருக்கும்..என்பதை மறவாதீர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக